ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் - அமைச்சர் கெஹலிய

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (25) தெரிவித்துள்ளார்.


நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.


இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது குறித்த பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.

No comments: