கைதடி முதியோர் இல்லத்தில் 48 முதியவர்களில் 41 பேருக்கு கொரோனா!!


சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர்களில் 41 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் 98 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.


இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. 


அவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments: