டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம்: ஆராச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்


இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் (தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில்) என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.


இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின் அடிப்படையில் இந்த தகவல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி இலங்கையில் 95.8% தொற்றுகளுக்கு டெல்டா மாறுபாடு காரணமாக இருந்தது மற்றும் பல்வேறு மாகாணங்களில் டெல்டா பாதிப்பு 84% முதல் 100% வரை இருந்தது என வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு, இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலைக் கண்டறிவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.No comments: