ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி!!


அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.


இலங்கை மத்திய வங்கியி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், நேற்று செவ்வாய்கிழமை அமெரிக்க டொலரொன்று 204.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாயின் பெறுமதி நேற்று முன்தினம் 202.90 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியினால் பல வாரகாலமாக 202 ரூபாவாகப் பேணப்பட்டுவந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியானது நேற்றையய தினம் சடுதியாக 204.89 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.


இருப்பினும் நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றினை 228 - 230 ரூபாய் விலையில் இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

No comments: