மோசடி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் - அமைச்சர் பந்துல


சதொச அல்லது வேறு எந்த அரச நிறுவனங்களிலில் நிதி மோசடி இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டால்  அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஒருசிலர் தெரிவிப்பதை போன்று, அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.


இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபிக்க முடிந்தால், அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறுவதற்கு தயாராக இருப்பதாகவும் பந்துல குணவர்தன கூறினார்.

No comments: