குடும்ப தகராறு: கணவனை கொலை செய்த பெண்ணொருவர் யாழில் கைது


குடும்ப தகராறு காரணமாக கணவனை திருவலை கட்டையால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.


நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு இடம்பெற்ற நிலையில் சம்பவத்தினத்தன்று இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து குறித்த பெண் தனது கணவனை தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


இதனையடுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: