பாதுகாப்பு அமைச்சரின் கீழ் கைது செய்யும் உத்தரவு - எரான் விக்ரமரத்ன அதிருப்தி


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சர் கொண்டிருப்பது குறித்து எதிர்க்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.


எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.


அத்தோடு குறித்த நபரை சுமார் ஒன்றரை வருடம் வரையில் காலத்திற்குக் காலம் நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமை மிகவும் பாரதூரமான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதன் ஊடக நீதியை நிலை நாட்ட வேண்டும் என எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

No comments: