சிறுவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி - இராணுவத் தளபதி


12 - 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கு நாளை (24) முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


கொழும்பு, அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாகும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையிலும், மற்ற இரண்டு மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


குறித்த நிலையங்களில் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.


இதேவேளை குறித்த திட்டம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

No comments: