அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் இராஜினாமா : ராஜபக்ஷ அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்!


அரசியல் தலையீடு காரணமாக அரச நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகள் இராஜினாமா செய்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.


நெல் சந்தைப்படுத்தல் வாரிய தலைவர் மற்றும் நுகர்வோர் விவகார ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் அரசியல் தலையீடு காரணமாக இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.


முடிவுகளை எடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாடு தற்போது கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் இத்தகைய இராஜினாமாக்கள் ஒரு கடுமையான சவால் என்றும் உறுதியாக இருக்க வேண்டிய பல அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.


ஆகவே நாட்டில் ஏற்படும் தாக்கத்திற்கு ராஜபக்ஷ அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

No comments: