20 தோல்வியடைந்துவிட்டது.. 19 வது திருத்தத்திற்கு திரும்ப வேண்டும் - ரணில்


அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நேற்று விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி தனக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அனுபவம் இருப்பதை ஒப்புக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


20 வது திருத்ததின் ஊடாக அமைச்சரவை ஆட்சி முறை இரத்து செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.


எனவே, பிரதமர் முன்வந்து அனுபவம் உள்ள மற்ற அனைத்து அமைச்சர்களையும் இணைத்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

No comments: