பயங்கரவாத தடை சட்டம் : பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடையே கலந்துரையாடல்


பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது குறித்து பிரித்தானியாவுடன் கலந்துரையாடல் இடமபெற்றுள்ளது.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பின்போது பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


குறிப்பாக பாதுகாப்பு, சட்ட அமுலாக்க நிறுவனங்களில் பிற நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: