நடேசனை மீண்டும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு


மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக, திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.


அதேவேளை பெண்டோரா ஆவணங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகளின்போது அவதானம் செலுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை குறித்த விசாரணைக்கு மேலதிகமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: