இலங்கையில் பால்மாவின் விலை அதிகரிப்பு - புதிய விலை இதோ


இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால்மா மற்றும் 400 கிராம் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை 250 ரூபாயாலும் 400 கிராம் பக்கெட்டை 100 ரூபாயாலும் அதிகரிக்க  பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பக்கெட்டின் புதிய விலை 1195 ஆகவும் 400 கிராம் பக்கெட் விலை 480 ஆகவும் அதிகரித்துள்ளது.


அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்க அரசாங்கம் முன்னதாக தீர்மானித்திருந்தது.


இருப்பினும் பால்மா, கோதுமைமா, சீமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கி நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: