யாழில் பல மாதங்களாக பொலிஸாருக்கு தண்ணிக்காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – கோப்பாய், பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர். சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.
sulaksan
