மத்திய கிழக்கில் பதற்றம் தேவையில்லை - ஐரோப்பிய ஒன்றியம்
ஈரானும் இஸ்ரேலும் தற்போது நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களை தொடர்ந்து அமைதி காக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் காஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக போர் நிறுத்தம் பலவீனமாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
"நேற்றிரவு, மீண்டும் பதற்றம் அதிகரித்திருப்பதை நாம் காண்கிறோம். இந்தப் பிராந்தியத்திற்கு பதற்றம் அதிகரிக்கத் தேவையில்லை.
மாறாக சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மேசைக்கு அமர்ந்து ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்," என தூதுவர் காஜா கல்லாஸ் கூறியுள்ளார்.
