30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் இருந்து உடனடியாக விலக அரசு தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் இருந்து உடனடியாக விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து உடனடியாக விலகுவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவை அடுத்த வாரமே ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments