மஹிந்தவின் சிறப்பு கடிதம் - நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை!
நாடளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் 1981 ஆம் ஆண்டின் இலக்கம் 1 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) ஐ மேற்கோள் காட்டி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் என்ன நிகழலாம் அல்லது நடக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் பிரிவு 24 (3) இன் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் நிலுவையில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...
- கொரோனா வைரஸ் தாக்கம் - கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு..!
- ஏப்ரல் 20 க்குப் பின்னர் வணிக செயற்பாடுகளை மீண்டும் தொடங்குங்கள் - பிரதமர் மஹிந்த
- யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 64 பேருக்கான பரிசோதனை முடிவு வெளியானது
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல்..!
- திங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..! அரசாங்கம் தீர்மானம்
- "மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது"
- போலி செய்திகளை வெளியிட்ட 17 பேர் கைது...!
- கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா, 9 பேர் குணமடைந்தனர்...!
