"பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான நேரம் இல்லை"

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இது தவறான காலம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (18) கருத்து தெரிவித்துள்ள அவர், புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பரிசோதனை நடத்தப்படாதமையினால் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இலங்கையில் போதுமான ப்ரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அதனால்தான் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, மக்களின் நல்வாழ்வைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் இந்த விடயத்தில் முடிவெடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும்" என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர், மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க

No comments: