தமிழகத்தை சேர்ந்த ஒருவர் யாழில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியாவின் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி என்ற 36 வயதுடைய ஒருவர் இன்று (08) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து  இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்றும் இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments