Wednesday, June 23, 2021

30 மணித்தியால பயணக் கட்டுப்பாடுகள் அமுல் - இராணுவ தளபதி


நாடளாவிய ரீதியில் இன்று (23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியால பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு அமுலுக்கு வரும் இந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சவேந்திர சில்வா கூறினார்.

எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.