ஜேர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!


யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.


இதில் இங்கிலாந்து அணி சார்பாக, 75 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒருகோலை அடிக்க 86 ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.


இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் இங்கிலாந்து அணி எதிர்வரும் 4 ஆம் திகதி உக்ரைன் அணியை காலிறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

No comments: