பாராளுமன்ற உறுப்பினரா அல்லது பேட்டை ரவுடியா யார் இந்த அங்கயன்?
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்வாகி இருந்தார் அங்கஜன் ராமநாதன் அவர்கள் குறிப்பாக யாழ்மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார் இவர் என்பது முக்கியமான விடயம் ஆகும்.
இப்படி அதிக மக்களால் நேசிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய இவர் அவரை நேசித்த மக்களிற்கே தலையிடியாக மாறி வருகிறார். இவர் யாழில் இயங்கிவரும் ஆயுதக் குழுக்கள் பலவற்றிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார் எனும் அதிர்ச்சி தகவல் இப்பொழுது எமக்கு கிடைத்துள்ளது.
அதாவது இவர் ஆயுதக்குழுக்களை தனது தேர்தல் காலத் தேவைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த குழுக்களுக்கு அதிகளவிலான நிதி உதவிகளை வழங்கி வருகிறார் மேலும் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி பொலிசாருக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி குறித்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுப்பதனையும் தடுத்து வருகிறார்.
இவ்வாறான தவறான தலைவர்களால் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வியலில் இவ் ஆயுதக்குழு கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
By: sulaksan
