ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இஸ்ரேலில் ஒருவர் கைது
ஈரானுக்காக உளவு பார்த்ததாக டெல் அவிவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கைது செய்யப்படும் வரை ஈரானுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை பெற்றுக்கொண்டு ஈரானுக்காகப் பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செய்ய அந்த நபர் ஒப்புக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிகின்றனர்.
