பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை


பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அழிவடைந்துள்ள நிலையில் முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்கு தெற்கு மின்டானோ தீவுக்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக்க அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகின்றது.


ஆரம்ப நில அதிர்வைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒன்றன்பின் ஒன்றாக மேலும் சில அதிர்வுகள் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவிக்கின்றது.


உயிரிழப்புகள் தொடர்பாக இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.