இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 1.6% அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி


நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.6% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.


ஏப்ரல் மாத இறுதியில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6,766 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அது தற்போது அது 6,873 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் போர் மற்றும் உலகளவில் எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் நிதி அமைப்பு வலுவாகவும் நிலையானதாகவும் இருந்ததாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.


சர்வதேச சூழ்நிலைகள் சவாலான இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் உள்ள வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் மொத்த கடன் தொகை தொடர்ந்து வேகமாக வளர்ந்துள்ளது.


தனியார் துறைக்கு வழங்கப்படும் கடன் தொகையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும்.


கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் வங்கித் துறையால் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை 24.4% குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.