மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : 11 பேர் கொண்ட இலங்கை அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக கிங்ஸ்டன் மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இருப்பினும் தற்போது மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி இன்னும் ஆரம்பமாகவில்லை.
இலங்கை அணியில் பத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சரித் அசலங்க, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மிலன் ரத்நாயக்க, மஹேஷ் தீக்க்ஷன, சமீர மஷனந்த, எமஷான் மலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜான் காம்ப்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், அமீர் ஜாங்கு, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
