கொரோனாவினால் கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.... மாவட்ட ரீதியான தகவல் இதோ
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 61 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நேற்றைய தினம் 55 ஆக இருந்தது என சுகாதார அமைச்சு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 254 பேர் (நேற்று மட்டும் 10 பேர்) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 91 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான தகவல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கொழும்பில் 61 பேர், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 31, யாழ்ப்பாணம்,16, கண்டி, 07, இரத்தினபுரியில் 5 பேரும் கேகாலையில் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை குருநாகல், மாத்தறை மற்றும் கல்முனையில் தலா 02 பேரும் காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியாவில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க
- மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..!
- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு
- ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...!
- தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை
- வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை சீனா சந்திக்கும் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
- அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
- கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்தம்..!
- சீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
- மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

